சென்னை: தலைமை தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து சேவைகளும் இனி ஒரே இணையத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான மாநாட்டில் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்தார். வாக்காளர் அட்டை பெறுவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.