நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரண்டு நாட்களாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 10 காசுகள் என்இசிசி குறைத்தது. இந்நிலையில், நேற்று முட்டை விலையில் மேலும் 15 காசுகள் என்இசிசி குறைத்துள்ளது. இதன்படி ஒரு முட்டையின் விலை 560 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில், முட்டை விலையில் 25 காசுகள் குறைந்துள்ளது.