சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு கருத்து பரப்பி வருகிறார். அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் பழனிசாமி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளர்.