Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ்

டெல்லி: பாகிஸ்தானை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற மணி சங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிடில் பெரும் விலை கொடுக்க நேரிடலாம் என மணிசங்கர் கூறியிருந்தார். மணிசங்கர் ஐயர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்துதானே தவிர, கட்சியின் கருத்து அல்ல என காங்கிரஸ் தெரிவித்தது.