சேலம்: 2021 சட்டமன்றத் தேர்தலில் பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி சொத்து விவகாரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த சேலம் சிறப்பு நீதிமன்றம், விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் பி.மிலானி தொடர்ந்த வழக்கில் சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.