Saturday, July 27, 2024
Home » வடிவத்தை மாற்றிக்கொள்ளும் மாயாஜால உடை!

வடிவத்தை மாற்றிக்கொள்ளும் மாயாஜால உடை!

by Porselvi

அடோப் மேக்ஸ் மாநாடு ஆண்டுதோறும் நடக்கும். மாநாட்டில் அந்நிறுவனம் தன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் ஆச்சர்யமூட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் ஆடைதான்.Adobe Firefly, Adobe After effects, Adobe Stock மற்றும் Adobe Illustrator ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆடையில் நாம் விரும்பும் டிசைனைக் கொண்டு வர முடியும். மேலும் இந்த உடையை கையாள ஒரு சிறு ரிமோட்டும் உள்ளது. புராஜெக்ட் பிரிம்ரோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆடை, Reflective Light-Diffuser Modules for Non-Flexible Display System தொழில்நுட்பம் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை ஆடைகளுக்கு மட்டுமின்றி ஹேண்ட்பேக்ஸ், பைகள், சீட் கவர், விளம்பரப் பலகைகள் போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும். இந்த ப்ராஜெக்ட் ப்ரிம்ரோஸ் ஆடை ஒரு ஆச்சர்யமூட்டும் கண்டுபிடிப்பாகக் கருதப் படுகிறது. ஆனால் இந்த ஆடை வடிவமைப்பில் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பு காரணமாக, சாதாரண உடையை விட எடை சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த உடையை நீங்கள் அணிந்துகொண்டு ஏதேனும் நிகழ்வுக்கு சென்றால் நிச்சயம் அந்த நிகழ்வில்தான் குயின் அல்லது கிங். இந்த உடையின் டிசைன்களும், அதன் மாறும் விதமும் இதுதான் எதிர்காலம் என்பதைக் காட்டுகிறது.
– நிஷா

You may also like

Leave a Comment

fifteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi