சென்னை: பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது. தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாட்டுக்கு முன்கூட்டியே வந்து சென்றுள்ளார் மோடி. பல்லடம், மதுரை, சென்னை, குமரி, கோவை என தன் கட்சி பிரச்சார கூட்டங்களை முன்னரே மோடி நடத்தியுள்ளார்.