Wednesday, May 8, 2024
Home » திமுக ஒன்றிய செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி இல்லத் திருமண வரவேற்பு விழா: அமைச்சர்கள், எம்.பிக்கள் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திமுக ஒன்றிய செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி இல்லத் திருமண வரவேற்பு விழா: அமைச்சர்கள், எம்.பிக்கள் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

by Ranjith

பெரியபாளையம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி-ஸ்ரீலதா தம்பதியரின் மகள் எம்.ஸ்வேதா-கே.நிதின்தேஜ் திருமணம் வானகரம் அடையாளம்பட்டு எல்.பி.ஆர் கார்டன் திருவாரூர் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நேற்று காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி கடிதம் அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் காதி மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சருமான ஆர்.காந்தி,

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழு துணை தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான இ.ஏ.பி.சிவாஜி, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ,

மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ வக்கீல் பரந்தாமன், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, வழக்கறிஞர் கிரிராஜன், டாக்டர் ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, ஆர்.எம்.கே கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், மாவட்ட நிர்வாகிகள் மு.பகலவன்,

எம்.எல்.ரவி, மு.கதிரவன், எஸ்.ரமேஷ், ஏ.வி.ராமமூர்த்தி, பி.வெங்கடாஜலபதி, பா.செ.குணசேகர், எம்.சுப்பிரமணி, டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஆ.சத்தியவேலு, டி.கே.சந்திரசேகர், எம்.ஜான்பொன்னுசாமி, ஆ.சினிவாசன் மு.மணிபாலன், கே.வி.ஆனந்தகுமார், நா.பரிமளம், கே.அபிராமி குமரவேல், அறிவழகன், பா.சுகுமாரன், எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், என்.செல்வசேகரன், கா.சு.ஜெகதீசன், தமிழ் உதயன், சித்ரா முனுசாமி, ராமா ஜெயம், சுதாகர், குமரவேல், மாவட்ட இளைஞரணி கே.வி.லோகேஷ்,

இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் டி.சங்கர், என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, வி.பி.ரவிக்குமார், தனசேகர், சம்பத், சுமன், ஜெயலலிதா சசிதரன், கே.ராஜேஷ், எஸ்.கார்த்திகேயன், எல்லாபுரம் கே.ராஜேஷ், கோல்ட் மணி, வெற்றி (எ) ராஜேஷ், வெங்கடேசன், சம்பத்குமார், ஸ்ரீதர், வில்சன், நீலவழகன், ஒன்றிய கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சண்முகம், வெங்கடேசன், சிவசங்கர், சிவாஜி, டெல்லி, சங்கர், ஜமுனா அப்புன், தண்டலம் ரவி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அப்புன், ஐ.ராஜா, ஆத்துப்பாக்கம் வேலு, ஆர்.விமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi