பெங்களூரு : தேவகவுடா பேரன் பிரஜ்வாலின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக 2023 டிசம்பரிலேயே பா.ஜ.க. நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக பா.ஜ.க. நிர்வாகி தேவராஜே கவுடா, அம்மாநில பா.ஜ.க. தலைவர் விஜயேந்திராவுக்கு டிசம்பரில் கடிதம் எழுதியிருந்தார். பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து பிரஜ்வால் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளதாக கடிதத்தில் தேவராஜே தகவல் அளித்துள்ளார்.