சென்னை: நீட் தேர்வை ஆதரித்து பேசி வரும் ஆளுநர் ரவியை கண்டித்து சைதாப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.