Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: நெல்லையில் திமுக வேட்பாளர் கனிமொழி பேச்சு

நெல்லை: ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் அங்கிருந்து ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வருகை தந்தார். பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு வந்த ராகுலை காங்., திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளனர். 8 மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். இதனிடையே, ராகுல் காந்தி பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு எப்போதுமே உங்களை வரவேற்க காத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை அதிகம் நேசிப்பவர்கள்.

காலையிலிருந்து தகித்த வெயில் கூட தற்போது பூங்காற்றாக மாறி வரவேற்கிறது என ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டினார். பாஜகவுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை கிடையாது. கேள்வி கேட்கும் எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்பி வருகிறது. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். திமுக, காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.