டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார். மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் கெஜ்ரிவால். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.