Monday, May 20, 2024
Home » டெல்லி போலீஸ் துறை, துணை ராணுவப் படைகளில் 1876 எஸ்ஐக்கள்

டெல்லி போலீஸ் துறை, துணை ராணுவப் படைகளில் 1876 எஸ்ஐக்கள்

by Porselvi

டெல்லி போலீஸ் துறை, துணை ராணுவப் படைகளில் 1876 எஸ்ஐ பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Sub- Inspector (Delhi Police & Central Armed Police Forces)
சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது வரம்பு: 1.8.2023 தேதியின்படி 20 லிருந்து 25க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். டெல்லி போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் மட்டும் பட்டப்படிப்புடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்- குறைந்த பட்ச உயரம் 170 செ.மீ., (எஸ்டியினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 80 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்- குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர்கள் 154 செ.மீ., இருக்க வேண்டும். டில்லி போலீஸ் துறை பணிக்கு மட்டும் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
உடல் திறன் தகுதி: ஆண்கள்- 1.6 கி.மீ., தூரத்தை 6.5 நிமிடங்கள் ஓடி முடிக்க வேண்டும். 3.65 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 1.2 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். 4.5 மீட்டர் குண்டு எறிய வேண்டும்.

பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 2.7 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 0.9 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷனால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கட்டணம்: ₹100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.8.2023.

You may also like

Leave a Comment

twenty + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi