டெல்லி : டெல்லி அரசின் அதிகாரிகள் நியமன சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்து இருந்தது.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, டெல்லி அரசின் அதிகாரிகள் நியமன சட்டம் குறித்து ஒன்றிய அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.