சென்னை: கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்டப் திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். கொடீசியா வளாகத்தில் நடைபெறும் விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.