Tuesday, May 21, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு எதிலும் முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு எதிலும் முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

by MuthuKumar

சென்னை: பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

மகப்பேற்றுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன. ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022ம் ஆண்டின் குறியீடுகள் (EXPORT PREPARDENESS INDEX – 2022) உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாக பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022-23ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது. இறக்குமதி – ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022-23ம் ஆண்டிற்கான விவரங்களை National Import Export Record for Yearly Analysis of Trade (NIRYAT) என்று ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மை குறியீடுகள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணி பெண்கள் சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளை பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு 3.31 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பீகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதை பறைசாற்றுகிறது.

மருத்துவமனைகளில் மகப்பேறுகள் ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கிய புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளை பராமரித்து காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னனியில் உள்ளது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்ற குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களை பெற்று முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்பு பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதை புலப்படுத்தியுள்ளது.

மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன. இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது.

You may also like

Leave a Comment

sixteen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi