சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் நாளை விநாயகர் சிலை கரைக்கப்படும் நிலையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னை முழுவதும் நாளை 1,519 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலை கரைப்பை ஒட்டி 16,500 போலீசார், 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.