வழுதலங்காய் – 2,
தேங்காய் துருவல் – ½ கப்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
சீரகம் தலா – 1 சிட்டிகை,
பூண்டு – 2 பற்கள்,
உப்பு,
கறிவேப்பிலை,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கடாயில் கால் கப் எண்ணெய் ஊற்றி அதில் வழுதலங்காய்த் துண்டுகளை சேர்க்கவும். பூண்டு பற்களை சிறியதாக நறுக்கி சேர்க்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.