Friday, May 17, 2024
Home » சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

by Kalaivani Saravanan

சென்னை: 2024 ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஜன.1 முதல் ஜன.31 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பிப்.1 முதல் பிப்.29 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக ஏப்ரல் 8ம் தேதியன்று 3,24,055 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33,34,498 பயணிகள் (Online QR 1,88,118; Static QR 2,18,565; Paper QR 19,58,328; Paytm 3,76,100; Whatsapp – 3,55,571; PhonePe – 2,26,008; ONDC – 11,808), பயண அட்டைகளை பயன்படுத்தி 33,23,602 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 61,976 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4,285 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 13,63,351 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

15 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi