சென்னை: சென்னை அடுத்த எர்ணாவூரில் உள்ள கிடங்கில் இருந்து 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெட்டிக்கடையில் கைப்பற்றிய குட்காவை அடுத்து கிடங்கில் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்டிக்கடை உரிமையாளர் ராஜேந்திரன்,கிடங்கு பொறுப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.