Thursday, May 9, 2024
Home » சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைப் பார்வையிட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைப் பார்வையிட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமனம்

by MuthuKumar

சென்னை: சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைப் பார்வையிட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பொது பார்வையாளர்கள்
சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதி
சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் திரு. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, இ.ஆ.ப., (Mr.Kartikay Dhanji Budhdhabhatti, I.A.S.,) (கைபேசி எண் 94459 10953) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் (Liaison Officer) ஜி. அருள் விஜூ (கைபேசி எண். 94451 94760).

சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதி
சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ், இ.ஆ.ப., (Dr.D. Suresh, I.A.S.,) அவர்கள் (கைபேசி எண் 94459 10956) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் (Liaison Officer) திரு. பி. சிவகுமார் (கைபேசி எண். 95660 82476).

சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதி
சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் திரு. முத்தாடா ரவிச்சந்திரா, இ.ஆ.ப. (Thiru. Muddada Ravichandra, I.A.S.,) அவர்கள் (கைபேசி எண் 94459 10957) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் (Liaison Officer) திரு. டி. கே. கணேசன் (கைபேசி எண். 94451 90218).

காவல் பார்வையாளர்கள்
சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட தேர்தல் காவல் பார்வையாளர் திரு. உதய் பாஸ்கர் பில்லா, இ.கா.ப., (Thiru. Uday Bhaskar Billa, IPS.,) அவர்கள் (கைபேசி எண் 94459 10962) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் (Liaison Officer) திரு. ஆனந்த்ராஜ் (கைபேசி எண். 99940 45544).

சென்னை மத்தியம் மற்றும் சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட காவல் பார்வையாளர் திரு. சஞ்சய் பாட்டியா, இ.கா.ப., (Thiru. Sanjay Bhatia, IPS.,) அவர்கள் (கைபேசி எண் 94459 10966) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் (Liaison Officer) திரு. ஆர். ஜெயகுமார் (கைபேசி எண். 94451 90058).

பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் (C-Vigil App) மொபைல் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

You may also like

Leave a Comment

20 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi