சென்னை: சென்னை கொட்டிவாக்கம் ஸ்ரீராம் அவென்யூவில் சாலையில் நடந்து சென்ற பெயிண்டர் தீனாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த பெயிண்டர் தீனாவை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயற்சி செய்தனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த தீனா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.