சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரியாணி வாங்க கடைக்கு சென்றவரிடம் இருசக்கர வாகனம், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஹரீஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 பேர் வழிப்பறி செய்துள்ளனர். ஹரிஷ் புகாரை அடுத்து இருசக்கர வாகனம், பணத்தை பறித்துச் சென்றவர்களுக்கு பேசின் பிரிட்ஜ் போலீசார் வலை வீசி வருகின்றனர்.