பழநி: பழநி மலைக்கோயிலில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருடத்திற்கு சுமார் 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ஆர்வமிகுதியில் மூலவர் சிலையை செல்போனில் படம் எடுக்கின்றனர். இந்த படங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகிறது.
ஆகமவிதிப்படி பழநி கோயில் மூலவரை படம் பிடிக்கக் கூடாது. படம் பிடிப்பதை தடுக்கும் கோயில் ஊழியர்களிடம் சில பக்தர்கள் தகராறு செய்வதும் அதிகளவில் நடந்தது. இதனால் பழநி கோயிலில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தடை விதிக்க ஆன்மிக பெரியோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அறிவுறுத்தலின் பேரில் அக். 1ம் தேதி (நேற்று) முதல் பழநி கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி நேற்று முதல் பழநி கோயிலுக்கு செல்போன் மற்றும் கேமரா போன்றவை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. பக்தர்கள் அதிக அளவில் வரும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விஷேச நாட்களிலும் இந்த தடை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*டோக்கனில் போட்டோ
வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் படிப்பாதை ஆகிய மூன்று இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.5 கட்டணம் செலுத்தி தங்களது செல்போன்களை வைத்து விட்டுச் சென்றனர். முன்னதாக செல்போன் வைக்க வரும் பக்தர்களின் புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் டோக்கன் வழங்கப்பட்டது. புகைப்படத்தில் உள்ள நபரிடம் மட்டுமே செல்போன்கள் திரும்ப வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
* டோக்கனில் போட்டோ