உலர்ந்த சோளம் – ½ கப்,
வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 50 கிராம்.
செய்முறை:
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருக ஆரம்பித்ததும் சோளத்தைப் போட்டு கலந்துவிட்டு மூடி வைக்கவும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் 50 கிராம் சர்க்கரையைப் போட்டு ஒரு கரண்டிக்கும் குறைவாகத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். கலர் மாறி சர்க்கரை சேர்ந்து வந்ததும் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயைச் சேர்க்கவும். வெண்ணெய் உருகி திக்காக சேர்ந்து வந்ததும் பொரிந்த (மூடிவைத்த சோளம் பொரிந்து ரெடியாகி இருக்கும்) சோளத்தினைச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு இறக்கவும். சூடான சுவையான கேரமல் பாப்கார்ன் தயார்.