வேக வைத்த பாஸ்தா – 1 கப்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் – தலா கால் கப்
கடலை மாவு – கால் கப்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – கால் கப்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாஸ்தாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, சீரகத்தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் சாஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பக்கோடா போல் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.சூப்பரான பாஸ்தா பக்கோடா ரெடி.