வாழைக்காய் – 2,
உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உளுந்து மாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து சிவந்ததும் எடுக்கவும்.