சென்னை: காலை உணவுத் திட்டத்தை அவரவர் தொகுதியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.