Wednesday, April 24, 2024
Home » திருவெண்காட்டில் பிரம்மவித்யா!

திருவெண்காட்டில் பிரம்மவித்யா!

by Porselvi

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“மண்டலி”
“த்ரிகோணம் த்ரிகோணம் த்ரிகோணம் புனஸ்சைவம்
த்ரிகோணம் த்ரிகோணம் ததோ வஞஸூதலம்
ஸார்த்தசந்த்ரகேஸரம் யுக்மஸோ விலிக்ய
ஸம்ப்ருதம் பூபுரைதேன யுதம்ஸர்வஜ்ஞேனாப்யர்ச்ய
தஸ்மின் தேவீதலே ரேகாயாம் விந்யஸ்ய

த்யேயா அபிநவஜலதவதனா கனஸ்தனீ குடிலதம்ஷ்ட்ரா
ஸவாஸனா வராபயகட்கமுண்டமண்டிதஹஸ்தா
காலிகாத் யேயாகாலீ கபாலீனீ குல்லா குருகுல்லா
விரோதினீ விப்ரசித்தா இதி ஷட்கோணகா:
உக்ரா உக்ரப்பரபா தீப்தா நீலா கனா

பலாகா மாத்ரா முத்ரா அமிதா இதி
நவகோணகா: இத்தம் பஞ்சதஸகோணகா:
ப்ராஹ்மீ நாராயணீ மாஹேஸ்வரீ
சாமுண்டா கௌமாரீ அபராஜிதா
வாராஹீ நாரஸிம்ஹீ இதி அஷ்டபத்ரகா:

சதுஷ்கோணகாஸ்சத்வாரோ தேவா
மாதவருத்ரவிநாயகஸௌரா: சதுர்த்தி
இந்த்ரயமவருணகுபேரா:’’
சக்ரம் விளக்கப்படுகிறது. முதலில்,

அக்ரம் கீழ்நோக்கிய ஸமபுஜ த்ரிகோணங்கள் ஒன்றனுள் ஒன்றாகவும் ஸமாந்தரமாகவும் ஸமகேந்த்ரமாகவும் மூன்று வரைய வேண்டும். இந்த அமைப்பிற்கு “நவகோணம்” என்று பெயர். மேற்கூறிய நவகோணத்திற்குள், பரஸ்பர ஸாமந்தரச்சேத த்ரிகோணங்கள் இரண்டின் பிணைப்பு வரைய வேண்டும். இந்த அமைப்பிற்கு “ஷட்கோணம்” என்று பெயர். ஆக, நவகோணமும் அதன் மத்தியில் அமர்ந்த இந்த ஷட்கோணமுமாகச் சேர்ந்து ஒரு “பஞ்சதஸ கோண’’ அமைப்பு உண்டாயிற்று.

நவகோணத்திற்கு வெளியே, அதன் மூன்று வெளிக்கோணங்களை ஸ்பர்ஸித்தவாறு ஒரே ஒரு ரேகையாலான ஒரு வ்ருத்தம் வரைந்து அதன் பரிதியின் வெளியே அதன் மீது அமர்ந்து அக்ரங்கள் அஷ்டதிக்குகலை இருக்குமாறு அஷ்ட பத்மதளங்கள் வரைய வேண்டும்.

இவ்வெல்லாவற்றிற்கும் வெளியே நான்கு திசைகளின் துவாரங்கள் அடைபட்ட வண்ணம் ஒரே ஒரு ரேகையாலான ஸமசதுரஸ்ராகாரமான ஒரு பூபுரம் வரைந்து பூர்த்தி செய்ய வேண்டும். இங்ஙனம் வரையப்பட்டசக்ரத்தின் மத்தியில் வரைந்து அதனில் ‘கா’ காரத்தாலான, அதாவது, ‘கா’ காரத்தை ப்ரதான பீஜமாகக் கொண்ட மந்திரத்தால் தேவி தட்சண காலிகையை பிரதிஷ்டை செய்து ஆராதிக்க வேண்டும்.

‘கா’ காரத்திற்கு “ரஸஜ்ஞா” என்றும் “ஸர்வஜ்ஞம்” என்றும் சிறப்புப் பெயர்களாம். சக்கரத்தின் மத்தியில் வரையப்பட்ட பிந்துவில், மஹாகாலருடன் ஆனந்தமாகக் கூடினவளாகவும் பத்ராத்மஜபாணியாகவும் விளங்கும் தட்சண காலிகையை தியானம் செய்து ஆவாஹனம் செய்யவேண்டும். சக்ரத்தில் பிந்துஸ்தானமே தேவீ தளம்; இதர பாகங்களெல்லாம் பரிவார தளங்கள். புதிய நீருண்ட மேகம் போல், கரிய சாயல் கொண்ட பேரழகி; ஸுந்தர வதனி; பருத்த அழகாக அடர்ந்துள்ள ஸ்தனபாரம் கொண்டவள்; வாயின் இரு ஓரங்களிலும் வெளிவந்து வளைந்து கூர்மையாக அதிவெண்மையாகப் பளிச் சென்று பிரகாசிக்கும் இரு கோரப்பற்கள் கொண்டவள்; ஸவரூபமான  மஹாகலரின் ஹ்ருதயத்தில் தன் திருப்பாதம் வைத்து நடனம் செய்து மகிழ்பவள்; தனது வலது கீழ்த் திருக்கையில் வரத முத்திரையும்,

வலது மேற்கையில் அபய முத்திரையும், தன் இடது மேற்கையில் “பத்ராத்மஜன்” என்ற அழகிய தொரு பட்டாக்கத்தியும், இடது கீழ்க்கையில்வெட்டப்பட்ட மனிதன் தலையும்,தாங்குபவள் இங்ஙனமாக, சௌந்தர்யத்தின் எல்லையாக ஜ்யோதிர் மயமாக பிரகாசிக்கும் தட்சணக் காலிகையைத் தியானிக்க வேண்டும்.

பிந்துவிற்கு அடுத்தபடி வெளியே அமைந்துள்ள ஷட்கோணத்தின் ஆறுகோணங்களில், உபாசகனை நோக்கி முனைந்துள்ள அக்ர கோணத்தில் தொடங்கி வௌர்வாபர்ய வாமகதியாக, ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு தேவியாக, காளீ, கபாலினீ, குல்லா, குருகுல்லா, விரோதினீ, விப்ரசித்தா என்ற ஆறு தேவிமார்களை பிரதிஷ்டை செய்து, அதே வரிசை, க்ரமமாக தியானாவாஹனாதி உபசாரவரிவஸ்யா பூர்வமாக ஆராதிக்க வேண்டும்.

ஷட்கோணத்திற்க அடுத்தபடி வெளியே அமைந்துள்ள நவகோணத்தின் ஒன்பது கோணங்களில் மேற்கூறியபடி வெளி திரிகோணத்தின் அக்ரகோணத்தில் தொடங்கி, பழையபடி பௌர்வாபர்ய வாமகதியாக, ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு தேவியாக, திரிகோணத்திற்கு திரிகோணம் அந்தர்க்கதியாக [மேன்மேல் உள் நோக்கி], உக்ரா, உக்ரபிரபா, தீப்தா, நீலா, கனா, பலாகா, மாத்ரா, முத்ரா, அமிதா என்ற ஒன்பது தேவிமார்களை பிரதிஷ்டை செய்து, அதே வரிசைக்ரமமாக, தியானாவாஹனாதி உபசாரவரிவஸ்யா பூர்வமாக ஆராதிக்க வேண்டும். இந்தப் படியாக, பிந்துவிற்கு வெளியே அஷ்டதளத்திற்கு உட்புறமாக அமைந்துள்ள பஞ்சதஸ்கோணத்தின் பதினைந்து கோணங்களில் அமர்ந்து உக்ராதி விப்ரசித்தா வரையிலான பதினைந்து தேவிமார்களை அந்த கிரமத்தில் ஆராதிக்க வேண்டும்.

வஸுதளத்தின் அமைப்பில் அஷ்ட திக் விதிக்குகளில் அமைந்துள்ள எட்டு பத்மதளங்களில் முதலில் அக்ர தளத்தில், அதாவது நவகோணத்தின் அக்ரகோணம் முனைந்துள்ள விடத்தை ஒட்டி உபாசகனை நோக்கி அமைந்துள்ள முதல் தளத்தில் ஆரம்பித்து பௌர்வாபர்ய வாமகதியாக, ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தேவியாக, ப்ராஹ்மீ, நாராயணீ, மாஹேஸ்வரி, சாமுண்டா, கௌமாரீ, அபராஜிதா, வாராஹீ,நாரஸிம்ஹீ என்ற எட்டு தேவிமார்களைபிரதிஷ்டை செய்து, அதே வரிசைக்கிரமமாக தியானாவாஹனாதி உபசார வரிவஸ்யா பூர்வமாக ஆராதிக்க வேண்டும்.

அஷ்டதளத்திற்கு அடுத்தபடி, வெளியே பூபுரத்தின் நான்கு மூலைகளில், முதலில் நாராயணி அமர்ந்துள்ள தளத்தை ஒட்டிய ஸ்தலத்தில் ஆரம்பித்து, பௌர்வாபர்ய வாமகதியாக, ஒரு வீதிக்கு ஒரு தேவராக, மாதவர், ருத்ரன், விநாயகர், சூரியன் என்ற நான்கு தேவர்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும். மேற்கூறியபடி, அஷ்டதளத்திற்கு அடுத்தபடி வெளியே, பூபுரத்தின் நான்கு திக்குகளில், முதலில் ப்ராஹ்மீ அமர்ந்துள்ள தளத்தை ஒட்டிய ஸ்தலத்தில் ஆரம்பித்து, பௌர்வாபர்ய வாமகதியாக, ஒரு திக்குக்கு ஒரு தேவராக இந்திரன், எமன், வருணன், குபேரன் என்ற நான்கு தேவர்களைபிரதிஷ்டை செய்யவேண்டும்.

ஆக, இங்ஙனம் அஷ்ட தளத்திற்கு அடுத்தபடி வெளியே எட்டு திக்கு விதிக்குகளில் மேற்கூறிய எட்டு தேவர்களைக் குறிப்பிட்ட கிரமத்தில் பிரதிஷ்டை செய்து,இந்திரன் முதல் சூரியன் வரையிலாக வரிசைக்கிரமமாக தயானாவாஹனாதி உபசார வரிவஸ்யா பூர்வமாக ஆராதிக்க வேண்டும். இதையே “மண்டலி” என்கிறார்.

“மாலினி”
“ஜ்வாலா மாலா வலீடா ஜ்வலந் சாதனு:
சங்க சக்ராஸிகேடான் சூலம் ஸந்தக் ஜநீம்யா கரஸிருஹை:’’
“ஸந்ததானா தரி நேத்ரா ஒளர்வாக்னிம் ஸங்கிரந்தீ
ரண புவி திதிஜான் நாசயந்தீபராஸாதுர்க்கா
ஜாஜ்வல்யமானா பவது மமஸதா ஸிம்ஹஸம்ஸ்தா
புரஸ்தாத் லமித்யாதி பூஜா’’.

வில், சங்கம், சக்கிரம், கத்தி, கேடயம், சூலம் தூக்கிய ஆள்காட்டி விரல், இவைகளோடு கூடியவளும் மூன்று கண்கள் உடையவளும், அக்னி ஜ்வாலையினால் சூழப்பட்டவளும், சிம்மத்தின் மேல் அமர்ந்திருப்பவளும் ஜ்வலிக்கின்றவளுமான ஜ்வலத் துர்க்கை என் முன்னே பிரசன்னமாகட்டும். இதையே “மாலினி’’ என்கிறார்.“சூலி”“பிப்ராணா சூலபாணாஸ்யரி ஸதர கதா சபா பாசான் கரப்றை;
மேக ச்யாமா கிரீடோல்லிகித ஜலதரா பீஷணா பூஷணாட்யா  ஸிம்ஹஸ்ந்தாதிருடா சதல்ரூபிரஸிகேடான் விநாசி:  பரிதாகன்யாபி பின்ன தைத்யா பவது பவபயத்வம்’’ (சூலினி)

மேகம் போன்ற நிறமுள்ளவரும், மேக மண்டல தொடும் கீரிடத்தோடு கூடியவரும், பயங்கரமானவளும் கத்தி – கேடயம் தரித்த நான்கு கன்னிகைகளால் சூழப் பெற்றவளும், சூலம், அம்பு, கத்தி, சக்கிரம், சங்கம், கதை, வில், பாரம் இவைககள் எட்டு கைகளில் ஏந்தியவளும், சிம்மத்தின் மீது அமர்த்திருப்பவளும், அசுரனை வெட்டி வீழ்த்தியவளுமான சூலினி துர்க்கையை பிரார்த்திக்கிறேன். என்பதையே “சூலி’’ என்கிறார்.

“வாராகி”
“ஏகவக்தராம் த்விநேத்ராபம் ச சதுர்புஜ ஸமன்விதாம்:
க்ருஷ்ணாம் பரதராம் தேவீம் வஜ்ர சக்ரஸம்யுக்தாம்:
ஹலமுஸல ஹஸ்தாம் தாம் வராபயகராம் புஜாம்:
ஸிம்ஹவாஹ ஸமாரூடம் கிரீட மகுடோஜ் வலாம்:
ஸர்வாலங்கார ஸம்பன்னாம் வாராஹீம் பூஜ யேத் புத’’:
[வராகி – உன்மத்த பைரவரோடு விளங்குபவள்]

ஒருமுகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் இவைகளைப் பெற்றிருப்பவளும், கருப்புநிறமுள்ள ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவளும். வஜ்ரம், சக்கரத்தைப் பெற்றிருப்பவளும். வரதமுத்திரை – அபயமுத்திரை, உலக்கை, தடிஏந்தியவளும், கீரிட – மகுடத்தை அணிந்திருப்பவளும். சிம்மவாகனத்தில் பவனி வருபவளும், சாமுத்ரிகா லட்சணங்களுடன் விளங்குபவளுமாகிய, வராகிதேவியை வணங்க வேண்டும். எருமையின் உருவம் தீட்டப்பட்ட கொடியை உடையவளும், தண்டத்தை ஏந்திய கரத்தை உடையவளுமான வாராஹி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என்முன்னே தோன்றி, மன உறுதியையும், அளவில்லாத ஆற்றலையும் தைர்யத்தையும் அருளுவதையே “வாராகி’’ என்கிறார்.

“என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே”
“செயிர்’’ என்பதற்கு துன்பம் என்பது பொருள். “அவி” என்பதற்கு அழிப்பது என்பது பொருள். “செயிர் அவி” – என்பதனால் துன்பங்களை அழிக்கும் என்றும், “நான்மறை சேர்” – என்பதனால் வேதத்தில் குறிப்பிடப்படும் “திருநாமங்கள்” என்பதனால் அந்த தேவதையின் மூலமந்திரம் ஜபிக்கும் முறை, பூசிக்கும் முறை, தியானிக்கும் முறையை குறிப்பிடுகிறார்.“செப்புவரே” என்பதனால் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரம் மற்றும் பூஜை முறைகளை பின்பற்றி பயன் அடைந்தவரை, சூட்டுகிறார். மேலும், செப்புவரே என்பதனால் பயனடைந்தோர் கூறும் அனுபவ மொழியையும் சொன்னது பலிக்கும். ஒரு வார்த்தையே “என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’’என்கிறார்.

“அந்தமாக”“பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வாராகி – என்று செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள்” என்பதனால் உமையம்மையை தனித்தனியே வாசிப்பதனால் போகத்தை அருள்வாள். பத்தையும் பிரித்து உபதேசிப்பதை “ஸ்ரீவித்யா’’ என்கிறார். அனைத்தையும் இணைத்து ஒரே உமையம்மையாக உபதேசிப்பதையும், “செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’’ என்று “பிரம்மவித்யா’’ என்ற தேவதையை குறிப்பிடுகின்றார்.

மோட்சத்தை கொடுக்கும், திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள பிரம்மவித்யாம்பிகை உடனுறை ஸ்வேதவனேஸ்வரரையும், திருக்கடவூரில் ஸ்ரீவித்யாவாக பத்து தேவதைகளும் சிவனை சுற்றி பரிவாரங்களாக திருவெண்காட்டில் ஒரே தேவதை பிரம்மவித்யாவாக இருக்கும் உமையம்மையை உபாசித்து பயன்பெறுவோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You may also like

Leave a Comment

three − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi