திபெத்: சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார். சிறுவன், அவரது குடும்பம் மட்டுமின்றி உலக சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். தனது செயல் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தலாய்லாமா கூறியுள்ளார். பொதுஇடம்,கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம் எனவும் தலாய்லாமா விளக்கம்அளித்துள்ளார் . சிறுவனுக்கு முத்தமிட்ட தலாய்லாமா தனது நாக்கை நீட்டி அதில் முத்தமிடகூறிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.