திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சிறுவனூர் கண்டிகையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், ராமஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவருமான மாதவன் இதில் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு பெருந்தலைவர் வெங்கட்ரமணா, கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் பூண்டி விஜி, சுலோச்சனா மோகன்ராவ், சுஜாதா மணி, அம்புரோஸ், மோவூர் தசரதன், எபினேசன், சுப்புலட்சுமி சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அடுத்த சட்டமன்ற தேர்தலானாலும் சரி திருவள்ளூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பூண்டி ஒன்றியம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். இதில் நிர்வாகிகள் ராமதாஸ், அரிபாபு, சத்தியமூர்த்தி, முனியன், கோதண்டபாணி, தமிழ்ச்செல்வி மற்றும் இந்நாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.