டெல்லி: திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது, ஏற்கனவே உள்ள புண்ணில் உப்பை கொட்டுவதற்கு சமம் என்று கூறியுள்ளார். காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.