புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பிறந்த நாளில் கட்சி வேறுபாடுகளை களைந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நாட்டுக்கான அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தனர். பிரதமர் மோடி டிவிட்டரில், அவரது தொலைநோக்கு தலைமையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதமருக்கு சமூக வலைதளத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பல்வேறு தலைவர்களும் மறைந்த நரசிம்ம ராவ் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பங்களிப்பை பாராட்டியிருந்தனர்.