சென்னை: பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பீகார் மாநில துணை முதலமைச்சரும் எனது அன்பு இளவலுமான தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகநீதியின்பால் தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. வெற்றியும், உடல்நலனும், சமத்துவச் சமுதாயத்தை நோக்கி தொடர்ந்து முன்வைக்கும் அடிகளும் நிறைந்ததாய் வரும் ஆண்டு தங்களுக்கு திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.