ராமநாதபுரம் : ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் சாலையோர கடைகளில் ஜூஸ் குடித்தும், பஜ்ஜி சுட்டும் வாக்கு சேகரித்தார். மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்கு ஆதரவாக தெப்பக்குளத்தில் பரதநாட்டியம் ஆடி, வாக்கு சேகரித்தார் அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம். தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், கடைவீதி பகுதிகளில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.