கேங்டாக்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்), பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜ தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே மக்களவை தொகுதிக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி முதல்வர் பிரேம் சிங் தமாங், சோரெங்-சகுங் மற்றம் ரெனாக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.