Thursday, May 16, 2024
Home » ஆஷஸ் 2வது டெஸ்ட்: நாதன் லயன் காயம் ஆஸி.க்கு பின்னடைவு

ஆஷஸ் 2வது டெஸ்ட்: நாதன் லயன் காயம் ஆஸி.க்கு பின்னடைவு

by Mahaprabhu

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளில் 5 விக்கெட்டுக்கு 339 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான நேற்று ஸ்டீவன் ஸ்மித் தனது 32வது சதத்தை விளாசினார். அவர் 110 ரன்களில் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 100.4 ஓவரில் 416 ரன் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் கிராவ்லி 48 ரன்னில் நாதன் லயன் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஒல்லி போப் 42, ஜோ ரூட் 10, பென் டக்கெட் 98 ரன்னில் அவுட் ஆகினர்.

நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 61 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன் எடுத்துள்ளது. ஹாரி புரூக் 45, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்னும் 138 ரன்பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இன்று 3வது நாளில் தொடர்ந்து பேட் செய்கிறது. இதனிடையே நேற்று பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த போது நாதன் லயன் காலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். அவர் இன்று பந்துவீசுவாரா என்பது தெரியவில்லை. லயன் காயம் ஆஸி.க்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

19 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi