Tuesday, May 21, 2024
Home » முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.3.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார். 2022 ஜனவரியில் கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கைத் தொடக்கப்பட்டு, பிப்ரவரியில் 100 தமிழ் ஆய்வாளர்கள்/ படைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2023 அக்டோபர் 1 அன்று மும்பையில் கலைஞர் தமிழ் ஆய்வாளர்கள் பங்கேற்ற ‘கலைஞர் தமிழ் ஆய்வு மாநாடு’ நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் கலைஞர் 100 நூல் ஆவணங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டுக் குழுத் தலைவராக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செயல்பட்டு, ‘கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை’ தலைவராக முனைவர் மு.கலைவேந்தன் அவர்களும், கவிஞர் சண்.அருள்பிரகாசம் அவர்களும் தமிழ் ஆய்வாளர்களுடன் இணைந்து கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்கள் தயாரிக்கப்பட்டு, திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் பிரசுரிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரால் வெளியிடப்பட்ட கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்கள் மற்றும் அதன் அந்நூல்களின் ஆசிரியர்கள் விவரங்கள்
1. கலைஞரின் தமிழ்வழிக் கல்விக் கனவு -மருத்துவர் சு.நரேந்திரன்
2. KALAIGNAR’S WORLD OF LITERATURE Dr. B. ILANGO
3. கலைஞர் கண்ட அய்யனும் அடிகளும் – மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி
4. கலைஞரும் வள்ளுவரும் முனைவர் வி.ஜி.சந்தோசம்
5. கலைஞரின் கவிதை மழையில் நனைந்தேன் -முனைவர் சரசுவதி இராமநாதன்
6. கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம் – முனைவர் உலகநாயகி பழனி
7. கலைஞர் படைப்புலகம் -கவிஞர் சண்.அருள்பிரகாசம்
8, ஐந்தமிழ் அறிஞர் கலைஞர் முனைவர் சண்முக செல்வகணபதி
9. வரலாற்றில் கலைஞர் கேள்விகள் ஆயிரம் முனைவர் மு.கலைவேந்தன்
10. கலைஞரே ஒரு கவிதைதான் – பாவலர் நொச்சிப்பூந்தளிரன்
11. கலைஞரின் மேடைத்தமிழ் – முனைவர் பா.வேலம்மாள்
12. கலைஞர் பிள்ளைத்தமிழ் – புலவர் பூவை. சு.செயராமன்
13. கலைஞரும் வீறுகவியரசரும் – பாரி முடியரசன்
14. கலைஞரின் திருக்குறள் வெளிப்பாட்டுத்திறன் – முனைவர் கலைமகள் சிவஞானம்
15. கலைஞர் செம்மொழி தமிழும் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் – முனைவர் இரா.இராசாமணி
16. கலையும் கலைஞரும் முனைவர் அருட்செல்வி கிருபை ராசா
17. கலைஞர் சிறுகதைகளில் புரட்சி புலவர் ப.கனகரத்தினம்
18. கலைஞரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமைகள்- முனைவர் இளமதி சானகிராமன்
19. உடன்பிறப்பே – முனைவர் ம.மணிமேகலை
20. கலைஞரின் சாதனைகள் 100 – முனைவர் கவிதை கணேசன்
21. கலைஞரின் திரைத்தமிழ்தேன் – கவிஞர் ஆவராணி ஆனந்தன்
22. நாட்டுப்புறப்பாடல்களில் கலைஞர் புகழ் பாடல்கள் நூறு – வளப்பக்குடி கவிஞர் வீரசங்கர்
23. கலைஞரின் திருக்குறள் உரை நெறி – முனைவர் கி.சிவகுமார்
24. கலைஞரின் இளமைப்பருவமும் வாழ்வியல் மொழிகளும் – டாக்டர் வா.செ.செல்வம்
25. கலைஞரின் நகைச்சுவை – மருத்துவர் ந.சூனியர் சுந்தரேஷ்
26. கலைஞரும் தொல்காப்பியரும் – முனைவர் வெ.அ.நாகரெத்தினம்
27. கலைஞர் ஒரு காலக்கண்ணாடி – முனைவர் பி.கணேஷ்
28. கலைஞரின் தேனலைகள் முனைவர் பி.ரகமத் பீபி
29. கவிதை வரலாற்றில் கலைஞர் -முனைவர் இரா.தண்டபாணி
30. கலைஞரின் இலக்கியக் கொடை – முனைவர் ச.முருகேசன்
31. கலைஞரின் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் – முனைவர் க.அழகர்
32. கலைஞரின் புதினங்களில் காரிகையர் பேரா. கு.ஜெயசித்ரா
33. கலைஞரின் அனல்பறக்கும் வசனங்கள் – சரசுவதி அரிகிருஷ்ணன்
34. கலைஞர் குறளோவியத்தின் எழிலோவியங்கள் – முனைவர் பூ.லலிதபாலா
35. தொல்காப்பியப்பூங்காவில் கலைஞரின் கவின்மணம் – கவிஞர் ச.குமரவேல்
36. கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் தேதியும் சேதியும் – க.கண்ணகி
37. குறளோவியத்தில் கலைஞரின் ஆளுமையும் பன்முக ஆற்றலும் வழக்கறிஞர் க.கணேசன்
38. வரலாற்று நோக்கில் கலைஞரின் பொன்னர் சங்கர் – கோ.பிரவினா சேகர்
39. கலைஞரின் திரைப்பயணம் – கவிஞர் தமிழ்க்கனல்
40. கலைஞரின் கவிதைகளில் பகுத்தறிவும் பண்பாடும் – பாவரசு முகவை திருநாதன்
41. கலைஞரின் பன்முக ஆளுமை – முனைவர் சங்கீதா சரவணன்
42. கலைஞரின் பயண அனுபவங்கள் – முனைவர் சு.சுஜாதா
43. கலைஞரின் திரை இசை அமுது – முனைவர் தி.வ.சந்திரிகா
44. கலைஞர் அந்தாதி – பாவரசு வதிலை பிரதாபன்
45. கலைஞர் கவிதைகளில் இலக்கியச் செல்வாக்கு – முனைவர் மு.லோகநாயகி
46. கலைஞரின் சட்டமன்றச் சொற்பொழிவுகள் – முனைவர் சு.பாரதிராணி
47. போற்றதும் போற்றதும் கலைஞரை போற்றதும் -முனைவர் கே.ராதா
48. பேராசிரியரின் பார்வையில் கலைஞர் முனைவர் தெ.வாசுகி
49. கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா முனைவர் இரா.கோடீஸ்வரி
50. கலைஞரின் ஆட்சியில் கணினித்தமிழ் -முனைவர் இரா.இந்து
51. கலைஞரின் சிறுகதைகளில் சீர்திருத்தச் சிந்தனைகள் -முனைவர் ச.பொன்ஜெயந்தி
52. கலைஞரின் சிறுகதைகளில் தொன்மம் – முனைவர் வெ.இராணி
53. கலைஞரும் முடியரசரும் – முனைவர் ப.சு.செல்வமீனா
54. கலைஞரின் முரசொலியில் கொள்கை முழக்கங்கள் – முனைவர் வெ.அமுதா
55. கலைஞரின் மொழிப்பற்றும் இனப்பற்றும் – முனைவர் சு.உமாதேவி
56. நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கலைஞரின் நினைவுகள் – முனைவர் சித்ரா ஆசைத்தம்பி
57. கலைஞரின் பொன்மொழிகள் – முனைவர் இரா.நாகேஸ்வரி
58. கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள் – முனைவர் அ.ஜெயராஜ்
59. கலைஞர் ஒரு புரட்சியாளர் முனைவர் பொ.திராவிட பிரேமா
60. கலைஞரின் கடிதங்களில் இலக்கிய மேற்கோள்கள் – முனைவர் தி.இராதா
61. கலைஞரின் நாடகங்களில் தமிழும் தமிழ்மக்களும் – ம.ஜெகதீசுவரி
62. கலைஞர் ஒரு பல்கலைக்கழகம் – பேரா. மு.நளா
63. கலங்கரை விளக்கமாய் கலைஞரின் பொன்மொழிகள் – முனைவர் அ.மரியசெசிலி
64. ஆய்வுநோக்கில் கலைஞரின் ரோமாப்புரி பாண்டியன் – முனைவர் ப.செ.முத்துலெட்சுமி
65. இளைஞர்களுக்கு கலைஞரின் ஆத்திசூடி கவிஞர் க.முகில்வேந்தன்
66. கலைஞரின் காலக்குறிப்புகள் (வினா-விடை) – ந.நல்லய்யன்
67. கலைஞரின் கதைகளில் மனிதநேயம் – முனைவர் ம.ஆனந்தவள்ளி
68. அறிஞர் அண்ணா வழியில் கலைஞர்- பேரா. கோ.இராஜலெட்சுமி
69. கலைஞரின் புதினங்களில் பண்பாட்டுச் சிந்தனைகள் – பேரா. வெ.சுமதி
70. கலைஞரின் வரலாற்று உணர்வுகள் -முனைவர் ஷீலா சீனிவாசன்
71. கலைஞர் நாடகங்களில் தமிழ்ப்பண்பாடு – முனைவர் க.புஷ்பலதா
72. கலைஞரின் குறளோவியம் பன்முகப் பார்வை – முனைவர் நயம்பு.அறிவுடை நம்பி
73. கலைஞரின் சங்கத்தமிழ் மரபும், மாண்பும் – முனைவர் ச.பிரியா
74. கலைஞரின் முத்தமிழ்க் கலைப்பணிகள் – கவிஞர் ப.கதிர்பாரதி
75. கலைஞரின் படைப்பாளுமைத்திறன் – முனைவர் மு.கவிதா
76 கலைஞரின் திருக்குறள் உரைத்திறன் – முனைவர் கோ.கிருட்டிணமூர்த்தி
77. தொல்காப்பியம் சூடிகொடுத்த கலைஞர் -முனைவர் தாமரை
78. கலைஞரின் சிறுகதைகளில் பண்பாடு முனைவர் மா.பாப்பா
79. கலைஞரின் சிலப்பதிகார நாடகக் காப்பியம் – முனைவர் செ.கற்பகம்
80. கலைஞர் கடிதங்களில் நடையும் கொடையும் – முனைவர் இரா.சிவகுமார்
81. கலைஞரின் நாடகங்களில் இலக்கிய ஆளுமை – முனைவர் சீ.மகேஸ்வரி
82. கலைஞரின் விழுமிய கதை மாந்தர்கள் முனைவர் த.கண்ணகி
83. கலைஞரின் கடிதங்களில் மொழிவளம்- முனைவர் சே.தெய்வக்கன்னி
84. கலைஞரின் கவிதைக்கலை -முனைவர் சு.சொர்ணரேகா
85. கலைஞரும் இராமானுஜரும் முனைவர் கே.எஸ்.பிரணார்த்திகரன்
86. கலைஞரும் இளங்கோவடிகளும் – முனைவர் யு.ஜெயபாரதி
87. கலைஞரின் வரலாற்று நாவல்கள் – பேரா. மு.புஷ்பா
88. கலைஞரின் வரலாற்று நோக்கில் தென்பாண்டிச் சிங்கம் – முனைவர் பா.சுமத்திரா
89. கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் காலமும் கருத்தும் – கவிஞர் க.முகில்வேந்தன்
90. நெஞ்சுக்கு நீதியில் கலைஞரின் அனுபவங்கள் – முனைவர் த.உமாராணி
91. கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை – முனைவர் சுகன்யா சுரேஷ்குமார்
92. A RHETORICAL STUDY OF KALAIGNAR’S SANKATH ΤΑΜΙΖΗ – Dr. R. ELAVARASU
93. கலைஞர் உலா – வாழ்த்துப்பாமாலை – பாவலரேறு ச.பாலசுந்தரனார்
94. கவிச்சூரியன் கலைஞர் – கவிஞர் சொற்கோ கருணாநிதி
95. கலைஞரின் கவித்துவமும் கலைப்பணிகளும் – முனைவர் த.ஜான்சிராணி
96. கல்வி மேம்பாட்டில் கலைஞர் – முனைவர் கே.ஆர்.கமலா முருகன்
97. கலைஞரும் கவின்மிகு தமிழும் – முனைவர் சு.பாஸ்கர்
98. கலைஞர் ஓர் இதழாசிரியர் – முனைவர் க.பேபி
99. கலைஞர் படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள் – முனைவர் சி.கண்மணி
100. கலைஞர் பேனா பேசுகிறது விஜயலெட்சுமி நரேந்திரன் இந்த 100 நூல்களைப் படைத்தவர்களில் 62 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட இயக்க எழுத்தாளர் கவிஞர் சண். அருள்பிரபாசம், திருவையாறு, ஔவைக் கோட்டம் நிறுவனத் தலைவர் முனைவர் மு. கலைவேந்தன், எழுத்தாளர் இமயம் மற்றும் நூலாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi