சென்னை: விலங்குகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து ஒரு ஜோடி மலைப்பாம்புகள், 2 ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு சாம்பல் ஓநாய் கான்பூர் பூங்காவுக்கு அனுப்பப்பட உள்ளன.