Thursday, February 29, 2024
Home » ராமநாதபுரம் மாவட்டத்தில் மனம் கொத்தும் ‘கிளிஞ்சல் கொத்தி’ பறவைகள் முகாம்: 35 ஆண்டுகளுக்கு பிறகு வருகை; பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனம் கொத்தும் ‘கிளிஞ்சல் கொத்தி’ பறவைகள் முகாம்: 35 ஆண்டுகளுக்கு பிறகு வருகை; பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்

by Arun Kumar

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மனதைக் கவரும் கிளிஞ்சல் கொத்தி பறவைகள் முகாமிட்டுள்ளன. இது பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பில், சதுப்பு நிலங்களில் கடந்த 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் இருந்து நிலப்பகுதியைக் காப்பதில் முக்கிய பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக கடந்த 02.02.1971ல் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் நடைபெற்ற முதல் சர்வதேச மாநாடு உடன்படிக்கையின்படி இந்தியாவில் 75 சதுப்பு நில தலங்களில் தமிழ்நாட்டில் 15 தலங்கள் உள்ளன.

அதிலும் குறிப்பாக வறட்சி மாவட்டம் என அறியப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 இடங்களும் ராம்சார் சதுப்பு நில தலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயம், கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் மற்றும் மன்னார் வளைகுடா தீவுகளான தனுஷ்கோடி, வாலிநோக்கம், அரியாங்குண்டு, உப்பூர் உள்ளிட்ட பகுதிகள் ராம்சார் சதுப்பு நில தலங்களாக அறியப்பட்டுள்ளன. இங்கு தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் தலைமையில் கடந்த 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்வாழ்விட மற்றும் வலசை வரும் நீர்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன. இதில், கிளிஞ்சல் கொத்தி என்னும் அறியவகை வெளிநாட்டு பறவை மணலி தீவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வந்து முகாமிட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும் சைபீரியா, மங்கோலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, வடதுருவப் பகுதியைச் சேர்ந்த உள்ளான் பறவைகள், மத்திய ஆசிரியாவில் இருந்து வலசை வரும் கழுகினங்களும் கண்டறியப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

15 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi