Wednesday, May 29, 2024
Home » ஏப்ரல் மாத வாகன விற்பனை

ஏப்ரல் மாத வாகன விற்பனை

by Lavanya

கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை நிலவரங்களை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த அளவில் நிறுவனங்கள் டீலர்களுக்கு அனுப்பி மொத்த விற்பனை விவரத்தின்படி கடந்த மாதம் 3,38,341 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு 3,32,468 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 1.77 சதவீதம் அதிகரித்துள்ளது.நிறுவனங்கள் வாரியாக, பயணிகள் வாகன விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் அதிகபட்சமாக 1,37,952 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 0.46 சதவீதம் அதிகம். இதுபோல், ஹூண்டாய் மோட்டார்ஸ் 50,201 (1 சதவீதம்), டாடா மோட்டார்ஸ் 47,883 (2 சதவீதம்), விற்பனை அதிகரித்துள்ளது. இதுபோல் மகிந்திரா (41,883), கியா (19,968), டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (18,700), ஹோண்டா கார்ஸ் (4,351), ரெனால்ட் (3,707) விற்பனையாகியுள்ளன. இதுபோல் டூவீலர்களை பொறுத்தவரை டிவிஎஸ் மோட்டார்ஸ் 3,01,449 (29 சதவீதம் அதிகம்), ராயல் என்பீல்டு 68,881 (9%), சுசூகி மோட்டார்ஸ் 88,067 (31%) விற்பனையாகியுள்ளன. வணிக பயன்பாட்டு வாகனங்களை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் 33 அதிகரித்து 28,516 வாகனங்களும், மாருதி சுசூகி 13.5 சதவீதம் அதிகரித்து 2,496 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi