சென்னை : குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு 4 மாதங்களில் வழங்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு தந்துவிட்டு ஓய்வூதியதாரர்களுக்கு மறுப்பது பாரபட்சம் என்றும் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.