சென்னை: ஓலா s1 Gen 2-க்கு போட்டியாக, ஏத்தர் 450 Apex எனும் புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் களமிறக்குகிறது. மணிக்கு 100 கி.மீ., வேகம், மேஜிக் ட்விஸ்ட் என்ற புது பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பல புதிய அம்சங்களுடன் ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகமாகிறது. வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்களான ஓலா மற்றும் ஏத்தர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.