சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.