சென்னை: நடிகை மாயாவின் மகனும் ரவுடியுமான விக்கி மர்மமான முறையில் உயிரிழந்தார். விக்கி என்கிற விக்னேஷ்குமார் (40) மீது போலீசை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சென்னை சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த விக்னேஷ்குமார் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தசரதபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.