Sunday, June 16, 2024
Home » போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 233 குரூப் சி பணியிடங்கள்

போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 233 குரூப் சி பணியிடங்கள்

by Porselvi

மத்திய பிரதேசம், போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 233 குருப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1Social Worker: 2 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 35க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம்.
2Office/Stores Attendant (Multitasking): 40 இடங்கள். (பொது-17, ஒபிசி-10, எஸ்சி-6, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
3Lower Division Clerk: 32 இடங்கள் (பொது-13, ஒபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும்.
4Stenographer: 34 இடங்கள் (பொது- 14, ஒபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 18 லிருந் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 10 நிமிடங்களில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி, அதை 50 நிமிடங்களில் ஆங்கிலம்/ 65 நிமிடங்களில் இந்தியில் மொழி மாற்றம் செய்து கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
5Driver (Ordinary Grade): 16 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட பணி அனுபவம்.

6Junior Warden (House keeper): 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30 லிருந்து 45க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருடம் ஏதாவதொரு கல்லூரியில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7Dissection Hall Attendant: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
8Upper Division Clerk: 2 இடங்கள் (பொது). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யவும், கம்ப்யூட்டர் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
9Data Entry Operator Grade ‘A’: 2 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் டைப்பிங் செய்ய தெிரிந்திருக்க வேண்டும்.
10Junior Scale Steno (Hindi): 1 இடம் (பொது). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 64 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி, அதை நிமிடத்திற்கு 11 வார்த்தைகள் என்ற வேகத்தில் விரைவாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

11Security Cum Fire Jamadar: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. தகுதி: உயரம் 167 செ.மீ., மார்பளவு விரிவடைந்த நிலையில் 85 செ.மீட்டரும், நல்ல பார்வைத் திறனும் மற்றும் உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
12Store Keeper Cum Clerk: 85 இடங்கள் (பொது-35, ஒபிசி-23, எஸ்சி-13, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-8). வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹1200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹600/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.
சிபிடி/ஸ்கில் டெஸ்ட்/ உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.aiimsbhopal.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2023.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi