சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. 1,116 இணையதளங்களில் சட்டவிரோதமாக படம் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக படத்தை இணையதளங்களில் வெளியிடுவதால் பாதிப்பு ஏற்படும் என்று படக்குழு தரப்பில் வாதிடப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜன.12-ம் தேதி வெளியாகிறது.