சென்னை: வார இறுதி மற்றும் தொடர் முகூர்த்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தினசரி வழக்கமாக ஓடும் பேருந்துகளுடன் இன்று 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்டஇடங்களில் சிறப்புபேருந்துகள் இயக்கம்.