கேரள: கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். நிலவரம்பு சட்ட விதியின் கீழ் கட்டடங்கள் கட்ட விதித்த தடையை விலக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்திவருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை எனவும் கேரள காங். கட்சி புகார் தெரிவித்துள்ளது. போராட்டம் காரணமாக இன்று மாலை 6 மணிவரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்; போக்குவரத்து எதுவும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.