நாமக்கல்: நாமக்கலில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ஷவர்மா சாப்பிட்டு சந்தப்பேட்டை புதூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி கலையரசி உயிரிழப்பு. மேலும் சிறுமியின் குடும்பத்தார் தீவிர சிகிச்சை பிரிவில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.